Tuesday, May 25, 2010

தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்?

எப்பொழுதும் கோடை விடுமுறைக்கு வெளிவரும் சாதாரண மொக்கைப் படங்கள் கூட ஓரளவுக்கு வசூலை அள்ளிக் குவித்து விடும். ஆனால் இந்த கோடையில் வெளிவந்த பெரிய பட்ஜெட், பெரிய நடிகடர், சிறிய பட்ஜெட் படங்கள் என எதுவும் குறைந்த பட்ச வசூலைக் கூட கொடுக்க வில்லை.


இதற்கு முக்கிய உதாரணம் சமீபத்தில் வெளீ வந்து படு தோல்வி தழுவிய விஜய்-யின் சுரா. இது விஜய்க்கு ரெட் கார்டு கொடுக்கும் அளவு திரையரங்க உரிமையாளர்களை யோசிக்க வைத்து விட்டது. இப்படியே போனால் தமிழ்த் திரையுலகின் நிலைமை என்ன? இத்தகைய தோல்விகளுக்கு முக்கிய காரணங்கள் என்ன?

மாஸ் ஹீரோக்களுக்கு காலமில்லை
ரசிகர்களின் பார்வை மாறிப் போய் விட்டது
ஒரே மாதிரியான திரைப் படங்கள்
பணமிருந்தால் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் (அ) படமெடுக்கலாம்

மாஸ் ஹீரோ என்ற மாய வலையில் சிக்கியவர்களுக்கு இனி தமிழ்த் திரையுலகில் இடமில்லை. "தமிழ்ப் படம்" அதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியிருந்தது. என்னதான் விஜய், அஜீத், ரஜினியாக இருந்தாலும் படத்தில் வித்தியாசம் இல்லை எனில் நிச்சயம் படு தோல்விதான்.

தமிழ் ரசிகர்கள் முன்னர் போல் இல்லை. கொஞ்சம் தெளிவடைந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். "அங்காடித் தெரு" போன்ற தரமான படங்களை நடிகர்கள் புதிதெனினும் ரசிகர்கள் அங்கீகரித்து வெற்றி பெற செய்தனர். அதற்காக எல்லோரும் இது போன்ற படங்கள் எடுக்க வேண்டும் என்றில்லை. "எஸ்.எம்.எஸ்" போன்ற மசாலா படங்கள் பல ரசிகர்களால் அங்கீகரிக்கப் பட்டவையே. நாலு பாட்டு, 5 சண்டை இந்த வட்டத்திற்குள் நிற்கும் படங்கள் தான் நிச்சயத் தோல்வியை சந்திக்கும்.


பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் படங்கள் வந்த பிறகு தமிழ் இயக்குனர்கள் அதே போன்ற கிராமத்து அரிவாள் கலாச்சாரக் கதைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது வேதனைக்குரியது. மக்களுக்கு திகட்டிப் போகுமளவு இது போன்ற படங்கள் வெளி வந்து விட்டன.

அடுத்து முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழில் படமெடுக்க நல்ல கதையோ, தகுதியான நாயகர்களோ அல்லது இயக்குனர்களோ தேவையில்லை. பணமிருந்தால் யார் வேண்டுமானாலும் படமெடுக்கலாம், நடிக்கலாம். இந்த தோனியில் பல படங்கள் வெளி வந்து "இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக்" ரேஞ்சுக்கு போய் விட்டிருக்கின்றன.

தீபாவளி பொங்கலுக்கே இரண்டு மூன்று படங்கள் என்றாகிப் போன நிலையில் சென்ற வாரம் ஒரே நாளில் ஆறுப் படங்கள் வெளி வந்தன. ஆறுமே பெட்டிக்குள் தூங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறது. இதே நிலைத் தொடர்ந்தால் பல திரையரங்குகளுக்கு மூடு விழா நடத்தும் காலம் வந்து விடும்.

3 comments:

புலவன் புலிகேசி said...

இனிமேலாச்சும் திருந்துங்கப்பா....

பொன் மாலை பொழுது said...

இவர்கள் அணைவரும் மாறியாக வேண்டும்.
வேறு வழி இல்லை.இனிமேல் "பார்முலா " முறையில்
தயாராகும் படங்கள் முடங்கிவிடும். திறமையானவர்களுக்கு
மட்டும் என்றும் வெற்றிதான்.

யார் யார் திறமையானவர்கள் என்பதில்தான் அவர்களுக்குள் குழப்பம்.
மொத்தத்தில் ரசிகர்களின் புத்திசாலித்தனம் கண்டு அவர்கள்
மாறியே ஆக வேண்டும்.

அ.ஜீவதர்ஷன் said...

nice

Post a Comment