Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Saturday, May 29, 2010

சிங்கம் - குறை விமர்சனம்

தலைப்பப் பாத்து பயந்துறாதீங்க. இது திரை விமர்சனம் தான். நான் சொல்ல வந்த குறையை கடைசியா சொல்றேன். நாடிகர் சூர்யாவின் 25வது படமாக வந்திருக்கும் சிங்கம் நிச்சயம் இந்த வருட சம்மரின் வெற்றிப் படம் தான்.

துரைசிங்கம் எனும் நேர்மை தவறா காவல் அதிகாரி தன் சொந்த ஊரான நல்லூரில் எஸ்.ஐ பணியில் இருக்கிறார்.சென்னையில் உள்ள ஒரு தாதா மயில்வாகணன் ஒரு வழக்கு தொடர்பாக தூத்துக்குடி நல்லூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். ஆனால் அவர் வேற ஒருத்தனை வச்சி இவுரு பேருல கையெழுத்து போட சொல்ல ஆரம்பிக்குது பிரச்சினை.

நம்ம நேர்மை த்வறா காவல் அதிகாரி வந்தவன் கிட்ட "3 மணி நேரத்துல மயில்வாகனன் இங்க வந்து கையெழுத்து போடனும்"னு சொல்ல ஆரம்பிக்குது வில்லனுக்கும் ஹீரோவுக்குமான வழக்கமான பிரச்சினை.


சரி நம்ம அனுஷ்காவுக்கு வருவோம். நாசரோட பொண்ணு காவ்யா தான் நம்ம அனுஷ்கா. அவரும் அவரோட தங்கையும் லீவுக்கு நம்ம துறைசிங்கம் இருக்குற ஊருக்கு வர்றாங்க.அப்பறம் என்ன வழக்கம் போல காதல், டூயட்டுன்னு போவுது. என்ன ஒரு திருப்தின்னா அனுஷ்கா படத்துல அதிக எடத்துல வர்றாங்க. இதுக்காகவே இன்னொரு தபா பாக்கலாம் போல.

பிரகாஷ்ராஜ்தான் அந்த வில்லன் மயில்வாகணன். கடைசி வரைக்கும் உதார் உட்டு கிட்டே திரியுற ரோல். எஸ்.ஐ-யா சொந்த ஊருல இருந்தவனை பிரச்சினையால இன்ஸ்பெக்டராக்கி சென்னைக்கு வர வச்சி பிரச்சினை பண்ணி வழக்கம் போல வில்லனா தோத்து போறாரு. சூர்யா ஹீரோவா ஜெயிக்குறாரு.

காமெடிக்கு விவேக். சில இடங்களில் சிரிக்க வைத்து சில இடங்களில் எரிச்சலூட்டுகிறார். அப்பறம் போஸ் வெங்கட் போல்லீஸ் படம்னா கூட இருக்குற எவனாவது சாவனுமே. அந்த பாத்திரத்தை இவுரு எடுத்துக் கிட்டாரு. பாடல்கள் சொல்லிக் கொள்ளும் அளவு இல்லை.


படத்தோட பெரிய பக்க பலம் திரைக்கதை, எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு.ஹரி படம்னா இப்புடித்தான் இருக்கும். அதுக்காக பஞ்ச் டய்லாக் எல்லாம் காதை கிழிக்குது. இதக் கொறச்சிறுந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும்னு தோனுச்சி.

சரி அது என்ன குறை விமர்சனம்னு தான கேக்குறீங்க? இதோ சொல்றே. அதாவது காக்க அன்புச் செல்வன் தான் சூர்யாவுக்கு சரியான ரோல். அது என்னவோ சூர்யாவ இந்த மாதிரி மசாலா ரொல்ல மனசு ஏத்துக்க மறுக்குது. எங்க சூர்யாவும் விஜய் மாதிரி பெரிய மாஸ் ஹீரோவா மாறி வீணாப் போயிருவாரோன்னு பயமா இருக்கு. அவுரு கமல் மாதிரி நெறைய வித்யாசமான் படம் அப்பப்ப சில மசாலாப் படங்கள் நடிச்சா நல்லா இருக்கும்.

இந்தப் படத்தோட ரெஸ்பான்ஸ் வச்சி எந்த முடிவுக்கும் வந்துறாதீங்க சூர்யா. மாஸ் ஹீரோ ஆசை வேணாம். நீங்க ஒரு நல்ல நடிகர். அந்த பாதையிலேயே போங்க.

மொத்தத்தில் சிங்கம் - பார்க்கலாம்.