Tuesday, June 8, 2010

டுவிட்டரில் நமீதா


தமிழ் ரசிகர்களின் மனதில் கனவுக் கன்னியாகத் திகழும் நடிகை நமீதா இப்போது டுவிட்டரில் இணைந்துள்ளார். பிரபலங்கள் பலர் சமீப காலமாக டுவிட்டரில் இணைந்து வருகிறார்கள். அவர்களின் அன்றாட நிகழ்வுகள், வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை நமீதாவும் டுவிட்டரில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அவரது டுவிட்டர் தளம்: http://twitter.com/inamitha. இது வரை 1400க்கும் மேற்பட்ட ரசிகர்களை அதில் பெற்றிருக்கிறார்.

Saturday, May 29, 2010

சிங்கம் - குறை விமர்சனம்

தலைப்பப் பாத்து பயந்துறாதீங்க. இது திரை விமர்சனம் தான். நான் சொல்ல வந்த குறையை கடைசியா சொல்றேன். நாடிகர் சூர்யாவின் 25வது படமாக வந்திருக்கும் சிங்கம் நிச்சயம் இந்த வருட சம்மரின் வெற்றிப் படம் தான்.

துரைசிங்கம் எனும் நேர்மை தவறா காவல் அதிகாரி தன் சொந்த ஊரான நல்லூரில் எஸ்.ஐ பணியில் இருக்கிறார்.சென்னையில் உள்ள ஒரு தாதா மயில்வாகணன் ஒரு வழக்கு தொடர்பாக தூத்துக்குடி நல்லூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். ஆனால் அவர் வேற ஒருத்தனை வச்சி இவுரு பேருல கையெழுத்து போட சொல்ல ஆரம்பிக்குது பிரச்சினை.

நம்ம நேர்மை த்வறா காவல் அதிகாரி வந்தவன் கிட்ட "3 மணி நேரத்துல மயில்வாகனன் இங்க வந்து கையெழுத்து போடனும்"னு சொல்ல ஆரம்பிக்குது வில்லனுக்கும் ஹீரோவுக்குமான வழக்கமான பிரச்சினை.


சரி நம்ம அனுஷ்காவுக்கு வருவோம். நாசரோட பொண்ணு காவ்யா தான் நம்ம அனுஷ்கா. அவரும் அவரோட தங்கையும் லீவுக்கு நம்ம துறைசிங்கம் இருக்குற ஊருக்கு வர்றாங்க.அப்பறம் என்ன வழக்கம் போல காதல், டூயட்டுன்னு போவுது. என்ன ஒரு திருப்தின்னா அனுஷ்கா படத்துல அதிக எடத்துல வர்றாங்க. இதுக்காகவே இன்னொரு தபா பாக்கலாம் போல.

பிரகாஷ்ராஜ்தான் அந்த வில்லன் மயில்வாகணன். கடைசி வரைக்கும் உதார் உட்டு கிட்டே திரியுற ரோல். எஸ்.ஐ-யா சொந்த ஊருல இருந்தவனை பிரச்சினையால இன்ஸ்பெக்டராக்கி சென்னைக்கு வர வச்சி பிரச்சினை பண்ணி வழக்கம் போல வில்லனா தோத்து போறாரு. சூர்யா ஹீரோவா ஜெயிக்குறாரு.

காமெடிக்கு விவேக். சில இடங்களில் சிரிக்க வைத்து சில இடங்களில் எரிச்சலூட்டுகிறார். அப்பறம் போஸ் வெங்கட் போல்லீஸ் படம்னா கூட இருக்குற எவனாவது சாவனுமே. அந்த பாத்திரத்தை இவுரு எடுத்துக் கிட்டாரு. பாடல்கள் சொல்லிக் கொள்ளும் அளவு இல்லை.


படத்தோட பெரிய பக்க பலம் திரைக்கதை, எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு.ஹரி படம்னா இப்புடித்தான் இருக்கும். அதுக்காக பஞ்ச் டய்லாக் எல்லாம் காதை கிழிக்குது. இதக் கொறச்சிறுந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும்னு தோனுச்சி.

சரி அது என்ன குறை விமர்சனம்னு தான கேக்குறீங்க? இதோ சொல்றே. அதாவது காக்க அன்புச் செல்வன் தான் சூர்யாவுக்கு சரியான ரோல். அது என்னவோ சூர்யாவ இந்த மாதிரி மசாலா ரொல்ல மனசு ஏத்துக்க மறுக்குது. எங்க சூர்யாவும் விஜய் மாதிரி பெரிய மாஸ் ஹீரோவா மாறி வீணாப் போயிருவாரோன்னு பயமா இருக்கு. அவுரு கமல் மாதிரி நெறைய வித்யாசமான் படம் அப்பப்ப சில மசாலாப் படங்கள் நடிச்சா நல்லா இருக்கும்.

இந்தப் படத்தோட ரெஸ்பான்ஸ் வச்சி எந்த முடிவுக்கும் வந்துறாதீங்க சூர்யா. மாஸ் ஹீரோ ஆசை வேணாம். நீங்க ஒரு நல்ல நடிகர். அந்த பாதையிலேயே போங்க.

மொத்தத்தில் சிங்கம் - பார்க்கலாம்.

Thursday, May 27, 2010

ராஜபக்சேவைத் தூக்கி எரிந்த தலைவனுக்கு ஜே!


சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் இருந்து ரஜினிக்கு திரைப்பட விழாவிற்கான அழைப்பிதழ் வந்ததும், அதை அவர் ஏற்க கூட மறுத்து விட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் கொடூரன் ராஜபக்சே நேரடியாக ரஜினியைத் தொடர்பு கொண்டு அழைத்ததாகவும், ஆனால் அதையும் தலைவர் ஏற்க மறுத்ததாகவும் கவிஞர் தாமரை கூறியிருக்கிறார்.

அவரது அலுவலக்த்தார் "இலங்கைத் தரப்பில் யார் தொடர்பு கொண்டாலும் அதற்கு பதிலளிக்கவோ, பெரிதாக ரியாக்ட் பண்ணவோ வேண்டாம்" என்று ரஜி்னி கூறிவிட்டார் என்றனர்.

தலைவர் தலைவர் தான். தலைவனுக்கு ஜே!

Wednesday, May 26, 2010

நாளைக்கு வருது சிங்கம்

Tuesday, May 25, 2010

தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்?

எப்பொழுதும் கோடை விடுமுறைக்கு வெளிவரும் சாதாரண மொக்கைப் படங்கள் கூட ஓரளவுக்கு வசூலை அள்ளிக் குவித்து விடும். ஆனால் இந்த கோடையில் வெளிவந்த பெரிய பட்ஜெட், பெரிய நடிகடர், சிறிய பட்ஜெட் படங்கள் என எதுவும் குறைந்த பட்ச வசூலைக் கூட கொடுக்க வில்லை.


இதற்கு முக்கிய உதாரணம் சமீபத்தில் வெளீ வந்து படு தோல்வி தழுவிய விஜய்-யின் சுரா. இது விஜய்க்கு ரெட் கார்டு கொடுக்கும் அளவு திரையரங்க உரிமையாளர்களை யோசிக்க வைத்து விட்டது. இப்படியே போனால் தமிழ்த் திரையுலகின் நிலைமை என்ன? இத்தகைய தோல்விகளுக்கு முக்கிய காரணங்கள் என்ன?

மாஸ் ஹீரோக்களுக்கு காலமில்லை
ரசிகர்களின் பார்வை மாறிப் போய் விட்டது
ஒரே மாதிரியான திரைப் படங்கள்
பணமிருந்தால் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் (அ) படமெடுக்கலாம்

மாஸ் ஹீரோ என்ற மாய வலையில் சிக்கியவர்களுக்கு இனி தமிழ்த் திரையுலகில் இடமில்லை. "தமிழ்ப் படம்" அதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியிருந்தது. என்னதான் விஜய், அஜீத், ரஜினியாக இருந்தாலும் படத்தில் வித்தியாசம் இல்லை எனில் நிச்சயம் படு தோல்விதான்.

தமிழ் ரசிகர்கள் முன்னர் போல் இல்லை. கொஞ்சம் தெளிவடைந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். "அங்காடித் தெரு" போன்ற தரமான படங்களை நடிகர்கள் புதிதெனினும் ரசிகர்கள் அங்கீகரித்து வெற்றி பெற செய்தனர். அதற்காக எல்லோரும் இது போன்ற படங்கள் எடுக்க வேண்டும் என்றில்லை. "எஸ்.எம்.எஸ்" போன்ற மசாலா படங்கள் பல ரசிகர்களால் அங்கீகரிக்கப் பட்டவையே. நாலு பாட்டு, 5 சண்டை இந்த வட்டத்திற்குள் நிற்கும் படங்கள் தான் நிச்சயத் தோல்வியை சந்திக்கும்.


பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் படங்கள் வந்த பிறகு தமிழ் இயக்குனர்கள் அதே போன்ற கிராமத்து அரிவாள் கலாச்சாரக் கதைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது வேதனைக்குரியது. மக்களுக்கு திகட்டிப் போகுமளவு இது போன்ற படங்கள் வெளி வந்து விட்டன.

அடுத்து முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழில் படமெடுக்க நல்ல கதையோ, தகுதியான நாயகர்களோ அல்லது இயக்குனர்களோ தேவையில்லை. பணமிருந்தால் யார் வேண்டுமானாலும் படமெடுக்கலாம், நடிக்கலாம். இந்த தோனியில் பல படங்கள் வெளி வந்து "இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக்" ரேஞ்சுக்கு போய் விட்டிருக்கின்றன.

தீபாவளி பொங்கலுக்கே இரண்டு மூன்று படங்கள் என்றாகிப் போன நிலையில் சென்ற வாரம் ஒரே நாளில் ஆறுப் படங்கள் வெளி வந்தன. ஆறுமே பெட்டிக்குள் தூங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறது. இதே நிலைத் தொடர்ந்தால் பல திரையரங்குகளுக்கு மூடு விழா நடத்தும் காலம் வந்து விடும்.

Monday, May 24, 2010

இரண்டு படங்களில் நடிக்கும் விஜய்


வில்லு, குருவி, வேட்டைக்காரனைத் தொடர்ந்து சுராவும் படு தோல்வியடைந்தது அனைவரும் அறிந்ததே. என்.எஸ்.சி என்று சொல்லக் கூடிய வினியோகஸ்தர்கள் குழு இத் தோல்விகளால் தாங்கள் அடைந்த நஷ்டங்களை ஈடு செய்ய இயலாது. எனவூ தாங்கள் கொடுத்த "குறைந்த பட்ச உத்திரவாத" பணத்தில் 40% மாவது விஜய் திருப்பித் தர வேண்டும் அல்லது தங்கள் தயாரிப்பில் நடித்து கொடுக்க வேண்டும் என கோரியிருக்கிறது.

ஆனால் இது பற்றி மூச்சு கூட விடாமல் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். ஆம் அவை "காவல்காரன்" மற்றும் "வேலாயுதம்".

காவல்காரன் படத்தை சித்திக் இயக்குகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக அசின் சேர்ந்திருக்கிறார். இதன் படப் பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் விஜய் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஜெயம் ரவியின் ச்கோதரர் ஜெயம் ராஜா இயக்கத்தில் "வேலாயுதம்" என்ற படத்திலும் நடித்து வருகிறார்.


இந்த படத்தில் இரண்டு நடிகைகள் ஜெனிலியா மற்றும் ஹான்சிகா மோட்வானி. இதோடு இல்லாமல் வரும் ஆகஸ்டு மாதம் முதல் 3இடியட்ஸ் ரீமேக்கிலும் நடிக்க போகிறாராம் விஜய்.

இப்படங்களாவது வெற்றி பெறுமா எனப் பார்க்கலாம்.

அழகுப் பதுமை அனுஷ்கா